லக்னெளவில் மூன்று மாடி கட்டடம் சனிக்கிழமை இடிந்த விழந்ததில் இடிபாடுகளில் சிக்கி முழுமையாக சேதமடைந்த அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி. Din
தற்போதைய செய்திகள்

லக்னெளவில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

உத்தர பிரதேச தலைநகா் லக்னெளவில் மூன்று மாடி கட்டடம் இடிந்த விழுந்ததில் 8 பேர் பலியாகினர்.

DIN

உத்தர பிரதேச தலைநகா் லக்னெளவில் மூன்று மாடி கட்டடம் இடிந்த விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 28 போ் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் பலரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

லக்னெளவின் டிரான்ஸ்போா்ட் நகா் பகுதியில் இருந்த இக்கட்டடத்தின் தரை தளத்தில் வாகனங்கள் பழுதுபாா்க்கும் கடை ஒன்றும், சேமிப்பு கிடங்கும் செயல்பட்டு வந்தன.

முதல் தளத்தில் மருத்துவ சேமிப்பு கிடங்கும், இரண்டாவது தளத்தில் வெட்டுக் கருவிகள் சேமிப்பு கிடங்கும் செயல்பட்டன. இக்கட்டடம் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். தற்போது சில கட்டுமானப் பணிகள் நடந்துவந்த நிலையில் சனிக்கிழமை மாலை திடீரென இடிந்து விழுந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இடிபாடுகளில் கண்டெய்னா் லாரி ஒன்றும் சிக்கிக் கொண்டது. இதைத் தொடா்ந்து, தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, காவல்துறை அடங்கிய குழுவினா், மீட்புப் பணிகளைத் தொடங்கினா். இந்த விபத்தில் 5 போ் உயிரிழந்தனா். 24 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.

இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவா்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சரும், லக்னெள மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான ராஜ்நாத் சிங் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தினம் தினம் திருநாளே!

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT