தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பி. படம்: ஏஎன்ஐ
தற்போதைய செய்திகள்

இரும்புக் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க சதி!

இரும்புக் கம்பியை வைத்து ரயிலை கவிழ்க்க நடத்தப்பட்ட சதி பற்றி...

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் இரும்புக் கம்பியை வைத்து குஜராத் மெயிலை கவிழ்க்கும் சதி வேலையில் மர்மநபர்கள் ஈடுபட்டனர்.

பிலாஸ்பூர் மற்றும் ருத்ராபூருக்கு பகுதிகளுக்கு இடையே 6 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பியை ரயில்வே தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ருத்ராபூர் நிலைய அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், ரயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் ரயிலை நிறுத்தியுள்ளார். பின்னர், தண்டவாளத்தில் இருந்து இரும்புக் கம்பி எடுக்கப்பட்டப் பிறகு, ரயில் புறப்பட்டுச் சென்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, கான்பூரில் அதிவேகமாக வந்த ரயிலை கவிழ்க்க எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் பாட்டில், தீப்பெட்டி உள்ளிட்டவற்றை தண்டவாளத்தில் வைத்து சதி வேலையில் மர்ம நபர்கள் ஈடுபட்டனர்.

தண்டவாளத்தில் பொருள்கள் இருப்பதைக் கண்ட ஓட்டுநர், ரயிலை நிறுத்த முயற்சித்தும் சிலிண்டரில் ரயில் மோதியுள்ளது. நல்வாய்ப்பாக சிலிண்டர் வெடிக்காததால் பயணிகள் தப்பினர்.

கடந்த வாரம், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் ரயில் தண்டவாளத்தில் தலா 70 கிலோ சிமெண்ட் துண்டுகளை வைத்து சரக்கு ரயிலை தடம்புரள வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுபோன்ற ரயில் கவிழ்ப்பு சதி வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT