FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

விக்கிரவாண்டியில் தவெக ஆர்ப்பாட்டம்

வக்ஃபு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 4 ஏப்ரல் 2025, 11:49 am IST
விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர்.
பகிர்:

விழுப்புரம்: வக்ஃபு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் சமூக-மத ரீதியிலான பணிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்படும் வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் நோக்கில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு திருத்தங்களுடன் மீண்டும் இரு அவைகளிலும் தாக்கல் செய்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வக்ஃபு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தென்மேற்கு மாவட்டச் செயலர் ஏ.வடிவேல் தலைமை வகித்தார்.

மாவட்டத் துணைச் செயலர்கள் இ.ரமேஷ் (எ) சக்திவேல், டி. காமராஜ், கார்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.ஏ. பிரித்திவிராஜ் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் குமரேசன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மனோரஞ்சிதம், மாவட்ட உறுப்பினர் சேர்க்கை அணி அமைப்பாளர் மணி நகரச் செயலர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று , மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments