தற்போதைய செய்திகள்

தாம்பரம் - நாகர்கோவில் ரயில் உள்பட 6 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

கோடை விடுமுறையையொட்டி தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு.

DIN

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையையொட்டி தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் மே 11 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

வாரம்தோறும் திங்கள்கிழமை இயக்கப்படும் தாம்பரம் - நாகர்கோவில் - சிறப்பு ரயில் மே 12 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரையிலும்

வெள்ளிக்கிழமை மட்டும் செல்லும் தாம்பரம் - திருவனந்தபுரம் ரயில் மே 9 முதல் மே 30 வரையிலும்

ஞாயிறு அன்று இயக்கப்படும் திருவனந்தபுரம் - தாம்பரம் ரயில் மே 11 முதல் ஜூன் 1 வரையிலும்

ஞாயிறு அன்று இயங்கும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரயில் சேவை மே 11 முதல் ஜூன் 1 வரையிலும்

திங்கள்கிழமை இயங்கும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில் சேவை மே 12 முதல் ஜூன் 2 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாட்டா மெமோரியல் மருத்துவமனையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

3,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆரக்கிள் நிறுவனம்!

தவெக மாநாடு: தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு! அமித் ஷா மீது தூக்கியெறியப்பட்ட மசோதா நகல்கள்!

மத்திய துணை ராணுவப் படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT