நடிகர் தனுஷின் குபேரா திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ விடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் நாகார்ஜுனா ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘குபேரா’. இந்தப் படத்தின் முதல் பாடலின் புரோமோ விடியோ இன்று (ஏப்.15) படக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் இந்தத் திரைப்படமானது வரும் ஜூன் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பாலிவுட் நடிகர் ஜிம் சராப் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘குபேரா’ திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
முன்னதாக, வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் முதல் கிளிம்ஸ் விடியோவில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஆகிய இருவரும் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளித்தது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், தமிழில் விவேகா மற்றும் தெலுங்கில் பாஸ்கரபாரதியின் வரிகளில் உருவான பாடல்களை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.
மேலும், இந்த முதல் பாடல் தமிழில் ’போய் வா நண்பா’ என்ற தலைப்பிலும், தெலுங்கில் ‘போய் ரா மாமா’ , மலையாளத்தில் ‘போயிவா நண்பா’, கன்னடத்தில் ‘ஹோகிபா கெலேயா’ மற்றும் ஹிந்தியில் ‘ஜாகே ஆனா யாரா’ ஆகிய தலைப்புகளில் வரும் ஏப்.20 ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.