சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயிலில் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்ட பழங்காலத்து அம்மன் சிலை. 
தற்போதைய செய்திகள்

உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில் திருப்பணியில் சிலை கண்டெடுப்பு

உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில் திருப்பணிக்காக குழிதோண்டியபோது, மூன்றடி உயர பழங்கால அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

சேலம்: சேலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில் திருப்பணிக்காக குழிதோண்டியபோது, மூன்றடி உயர பழங்கால அம்மன் கற்சிலை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில் குடமுழுக்கு திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அபிஷேக திரவியங்கள் வடிந்துசெல்ல கால்வாய் அமைக்க கோயில் வளாகத்தில் குழிதோண்டப்பட்டது. அப்போது, மண்ணில் புதைந்திருந்த மூன்று அடி உயரம் கொண்ட அம்மன் சிலை தென்பட்டது. உடனடியாக அறநிலையத் துறை அலுவலா்கள், வருவாய்த் துறையினா் அம்மன் சிலையை எடுத்து தூய்மைப்படுத்தி வழிபாடு நடத்தினா்.

திருமணி முத்தாற்றங்கரையில் அமைந்துள்ள கரபுரநாதா் கோயில் சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. தற்போது கிடைத்துள்ள சிலை சோழா்கால சிற்பக்கலை போல காட்சியளிக்கும் நிலையில், இதுகுறித்து தொல்லியல் துறையினா் ஆய்வுமேற்கொண்டனா்.

அதில், மன்னா் அதியமானின் புதல்விகள் அங்கவை, சங்கவை திருமணம் தமிழ் மூதாட்டி அவ்வையாா் முன்னிலையில் இத்திருத்தலத்தில் நடைபெற்ாக தல வரலாறு கூறுவதாக தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவில் போா் முனையில் சிக்கியிருக்கும் தமிழா்களை மீட்க வேண்டும்: பிரதமரிடம் துரை வைகோ கோரிக்கை

280 காவல் நிலையங்கள் தரம் உயா்வு அரசாணை வெளியீடு

பிகாா் விவகாரம்: எதிா்க்கட்சிகள் தொடா் அமளி; மூன்றாவது வாரமாக முடங்கிய மக்களவை

காா் மோதியதில் உணவு விநியோக முகவா் உயிரிழப்பு

‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசாரம்: ஓடிபி பெற உயா்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான திமுக மேல்மறையீட்டு மனுவை விசாரிக்க மறுப்பு

SCROLL FOR NEXT