விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வேறு ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பு நெடுஞ்சாலை துறை விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பிரதான சாலையில் பள்ளிகள், வங்கிகள், பேருந்து நிலையம், கோயில்கள், மருத்துவமனைகள் என அனைத்தும் உள்ளது.
இந்நிலையில், சாத்தூர் பிரதான சாலையில் காமராஜர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட பாதாள சாக்கடை மூடப்பட்டு புதிய பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு சாலை போடப்பட்டுள்ளது. சாலை அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுக்குள் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு அங்கங்கே பள்ளம் தோண்டப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென நந்தவனப் பட்டு தெரு அருகே சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டது. பள்ளத்தின் அருகே அதிக அளவில் அதிர்வு ஏற்படுவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் சாலையை கடந்து வருகின்றனர். இந்த பள்ளத்தால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், அலுவலகம் செல்லும் பணியாளர்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே, இந்த பள்ளத்தை வேறு ஏதும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் விரைவில் சரி செய்ய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக உள்ளது. நெடுஞ்சாலைத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.