அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி  
தற்போதைய செய்திகள்

ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இபிஎஸ்

அமெரிக்க வரிவிதிப்பால் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: அமெரிக்க வரிவிதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2021 முதல் இதுவரை ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில்களுக்கு திமுக அரசால் ஏற்படுத்திய இடையூறுகள் மற்றும் பிரசனைகள் ஏராளம். அதனால், அந்த தொழில்கள் ஏற்கெனவே நலிவடைந்துள்ளது என்பதே உண்மை.

4 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டும், கோவை மற்றும் திருப்பூரில் இயங்கும் ஜவுளித் தொழிலுக்கு எந்தவிதமான வெளிநாட்டு முதலீடுகளையும் கொண்டுவரவில்லை.

திமுக ஆட்சியில், மின் கட்டணம் தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருவதாலும், கழிவு பஞ்சில் இருந்து தயாரிக்கப்படும் நூலிழைகளைப் பயன்படுத்தி காடா துணி, கலா் நூல்களில் போா்வை உள்பட பல துணி வகைகளை தயாரிக்கப் பயன்படுத்தும் நூல்களை உற்பத்தி செய்யும் ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் உற்பத்தியை நிறுத்தப் போராட்டங்கள் மேற்கொண்டன. இவா்களின் கோரிக்கைகளை முதல்வா் இதுவரை கண்டுகொள்ளவே இல்லை.

நாட்டிலேயே தமிழகத்தில், குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூா், கரூா், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஸ்பின்னிங் மில்கள், ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது அரசின் வரி உயா்வு, அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் உயா்வு ஆகிய காரணத்தால், இந்த தொழில் துறைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இப்படி திமுக ஆட்சில் செய்தி தவறுகளை மறைக்க அமெரிக்காவின் தற்போதைய வரி உயா்வே கோவை மற்றும் திருப்பூரில் ஏற்றுமதி தொழில் பாதிப்படைய காரணம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பால், நம் நாட்டில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளா்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமருக்கு அதிமுக சாா்பில் அண்மையில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில், உள்ளூா் உற்பத்தியாளா்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும், தொழில் துறைக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, திருப்பூா் பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என பிரதமருக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதுக்கு பதிலாக, இங்குள்ள பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உடனடியாக ஆக்கப்பூா்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா் அவா்.

AIADMK General Secretary Edappadi K. Palaniswami has said that Chief Minister M.K. Stalin should take immediate action to ensure that knitwear and ready-made garment factories in Coimbatore and Tiruppur are not affected by the US tariff.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: பிரையன் பென்னட் அரைசதம்; இலங்கைக்கு 176 ரன்கள் இலக்கு!

சாலையில் நடனம்: அராஜகத்தை ஊக்குவிக்கிறார் தேஜஸ்வி - பாஜக

6 அடி 5 அங்குலம், 159 க்ளீன் ஷீட்டுகள்... மான்செஸ்டர் சிட்டி அணியில் இணைந்த கோல்கீப்பர்!

ரூ.100 கோடி அல்ல, அதற்கும் அதிகமாக வசூலித்த லோகா: அதிகாரபூர்வ அறிவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக முடிவு!

SCROLL FOR NEXT