ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி வரும் காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர் கண்ணன் வீடு  
தற்போதைய செய்திகள்

காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை!

காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனர்.

DIN

காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அளிக்கப்பட்ட புகார் வழக்கின் பேரில், மாநகராட்சி ஊழியர் கண்ணன் வீட்டில் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். காஞ்சிபுரம் மாநகராட்சியில் பிட்டராக பணிபுரிந்து வருகிறார். இவா் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்ததாக காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அளிக்கப்பட்ட புகார் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புதன்கிழமை காலை ஆய்வாளர் கீதா தலைமையிலான குழுவினர் மாநகராட்சி ஊழியர் கண்ணனுக்கு சொந்தமான வீடான காமாட்சி அம்மன் அவென்யூ இல்லத்தில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் ஐந்துக்கும் மேற்பட்ட ஊழியர்களும் வீட்டில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் என பல்வேறு பணிகளுக்கு அதிக அளவில் பணம் பெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், 51 வார்டுகளை கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில் நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் பிட்டர் கண்ணன் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

SCROLL FOR NEXT