கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

தில்லியில் யாா் ஆட்சி?: பாஜக 30 இடங்களில் முன்னிலை

பாஜக 30 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.

DIN

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைக்கானத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பாஜக 30 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.

புதுதில்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ்வர்மாவை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் பின்தங்கியுள்ளார்.

கல்காஜி தொகுதியில், முதல்வர் அதிஷி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை விட பின்தங்கியுள்ளார்.

ஜங்புராவில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் பின்தங்கியுள்ளார்.

பாபூர் தொகுதியில் அமைச்சர் கோபால்ராய்(ஆம் ஆம்தி) முன்னிலை.

கரவால் நகர் பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா முன்னிலை வகித்து வருகிறார்.

தில்லி சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றிபெற்றால் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், பாஜக 47 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 22 இடங்களிலும், காங்கிரஸ் ஆரம்பம் முதலே ஒரு தொகுதியில் மட்டும் முன்னிலையில் இருந்து வருகிறது.

ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டியில், மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்குமா ஆம் ஆத்மி? அல்லது 27 ஆண்டுகளுக்குப் பிறகு(1998-க்குப் பிறகு) மீண்டும் பாஜக ஆட்சியமைக்குமா பாஜக? என்பதை வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு பின்னர் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

நெல்லை நகரம், பாளை.யில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT