தேனீக்கள் கொட்டியதில் முதியவர் பலி! 2 பேர் படுகாயம்!
உத்தரப் பிரதேசத்தில் தேனீக்கள் கொட்டியதில் முதியவர் பலியாகியதைப் பற்றி...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேனீக்கள் கொட்டியதில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
பள்ளியா மாவட்டத்தின் நர்ஹி பகுதியிலுள்ள பைரியா-தம்ஹன்பூரா சாலையில் நேற்று (பிப்.15) மதியம் திடீரென அங்கு வந்த தேனீக்கள் சாலையில் சென்றவர்களை கொட்டித் தாக்கியுள்ளது. அப்போது, அவ்வழியாக வந்துக்கொண்டிருந்த இச்சா சௌபே கா புரா கிராமத்தைச் சேர்ந்த ரகுநாத் யாதவ் (வயது 75) என்ற முதியவரை அந்த தேனீக்கள் பலமுறை கொட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், படுகாயமடைந்த அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இதையும் படிக்க: தில்லி கூட்ட நெரிசல் ரயில்வேத் துறையின் தோல்வி: ராகுல் குற்றச்சாட்டு!
Advertisement
Advertisement
மேலும், இந்த தாக்குதலில் நக்ஷத்ரா யாதவ் (70) மற்றும் புரார் யாதவ் (40) ஆகிய இரு கிராமவாசிகளும் படுகாயமடைந்து தற்போது அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், திடீரெனத் தேனீக்கள் நடத்திய தாக்குதல் குறித்து தற்போது வரை யாரும் புகாரளிக்கவில்லை என்பதினால், அப்பகுதி காவல் அதிகாரிகள் முன்வந்து விசாரணை நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.