தற்போதைய செய்திகள்

வாரணாசியில் தவிக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்கள்: விமானத்தில் அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு!

வாரணாசியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், சென்னை திரும்ப முடியாமல் தவிப்பதாக தகவல்

DIN

வாரணாசி: வாரணாசியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், சென்னை திரும்ப முடியாமல் தவிப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாரணாசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், தென்னிந்தியா அணி சார்பில் தமிழகத்தில் இருந்து 6 வீரர்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றனர்.

பின்னர், அவர்கள் நள்ளிரவு 1 மணியளில் கங்கா காவேரி விரைவு ரயிலில் சென்னை திரும்புவதற்கு முன்பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், கும்பமேளாவுக்கு சென்றவர்கள் முன்பதிவு செய்த ரயில் பெட்டியில் ஏறியதால் சிக்கல் ஏற்பட்டது. இதனால் விளையாட்டு உபகரணங்களுடன் மாற்றுத்திறனாளி வீரர்களால் ரயிலில் ஏற முடியாத நிலையில் வாரணாசி ரயில் நிலையத்திலேயே காத்திருந்தனர்.

இதையடுத்து தங்களுக்கு மாநில அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், வாரணாசியில் சிக்கித் தவிக்கும் தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை விமானத்தில் அழைத்துவர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

“வண்டிய நிறுத்துங்க..!” மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்! பயணிகள் சாலை மறியல்!

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 8

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 7

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT