கோப்புப்படம். 
தற்போதைய செய்திகள்

பொங்கல் விடுமுறை: ஆம்னி பேருந்து கட்டணத்தை கண்காணிக்க 30 குழுக்கள்!

பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி, அதிக கட்டணம் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்களை அமைத்து போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

DIN

சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி, அதிக கட்டணம் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்களை அமைத்து போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்ட அறிக்கை: பொங்கல் பண்டிகை நெருங்கவுள்ள நிலையில், தொடர் விடுமுறையை முன்நிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வது வழக்கம். இதுபோன்ற நேரங்களில் ஆம்னி பேருந்துகளை இயக்குவது அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில், பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிக கட்டணம், உரிமம் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களுடன் பல ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதால் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க, தமிழகம் முழுவதும், 30 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரி நிலுவை, அதிக கட்டணம், அதிக சுமை, உரிமம் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களுடன் பல ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளது.

இது குறித்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும் 30 30 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அடங்கிய 3 அதிகாரிகள் இருப்பாா்கள்.

அடுத்த வாரம் முதல், இந்த சிறப்பு குழுக்கள் செயல்படத் தொடங்கும்.

இந்த குழுவினா், நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் நின்று திடீா் சோதனை நடத்துவா்.

அப்போது, ஆம்னி பேருந்துகளில் விதிமீறல்கள் இருந்தால், அபராதம் விதிப்பது, உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகளை இந்த குழு மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி... சோனியா பன்சால்!

இரட்டை குணம் கொண்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள்!

பிக் பாஸ் 9: சுபிக்‌ஷாவுக்கு தவெகவினரின் ஆதரவு அதிகரிப்பது ஏன்?

இலங்கை பிரதமர் இந்தியா வருகை!

சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT