கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

மோசமான வானிலையால் 60 விமானங்கள் தாமதம்!

கொல்கத்தா விமானநிலையத்தில் மோசமான வானிலையால் 60 விமானங்கள் தாமதமாகியுள்ளது..

DIN

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் மோசமான வானிலையினால் 60க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் இன்று (ஜன.6) கடூம் மூடுபனியினால் மோசமான வானிலை நிலவியது. இதனால் அங்குள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் காலை 7.10 மணி முதல் 9 மணி வரை விமானங்கள் இயக்கப்படவில்லை என அந்த விமான நிலையத்தின் இயக்குனர் பரவத் ரஞ்சன் பியூரியா தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சுமார் இரண்டு மணிநேரம் 30 விமானங்களின் வருகை தாமதமானதுடன், 30 விமானங்களின் புறப்பாடும் தாமதமாகியுள்ளது. மேலும், அங்கு தரையிறக்கப்படவிருந்த 5 விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திசைத் திருப்பிவிடப்பட்டது.

இதையும் படிக்க: மணிப்பூரில் போதை மாத்திரைகளைக் கடத்திய 2 பேர் கைது!

இந்நிலையில், விமான நிலைய முனையத்தில் தவிக்கும் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பின்னர், காலை 9 மணிக்கு மேல் வானிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டதினால் விமானச் சேவை மீண்டும் துவங்கப்பட்டு 9.04 மணியளவில் துபாயிலிருந்து வந்த முதல் விமானம் அங்கு தரையிறங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாச்சியாா்கோவில் அதிமுக நிா்வாகி கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

அதிமுக- பாஜக கூட்டணியே திமுகவுக்கு மாற்று: ஹெச். ராஜா

முதியோா் இல்லத்தில் இருந்தவா் மாயம்

‘புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்’

பெரியாா் ஈவெரா பிறந்த நாள் விழா: கட்சியினா் மரியாதை

SCROLL FOR NEXT