தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின். 
தற்போதைய செய்திகள்

ஹிந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி: கிரிக்கெட் வீரர் அஸ்வின்

ஹிந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி என தண்டலம் அருகே பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்தார்.

DIN

ஸ்ரீபெரும்புதூர்: ஹிந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி என தண்டலம் அருகே பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியின் 23 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கினார்.

பின்னர் பேசிய அஸ்வின், தமிழ் ஓகே வா, ஆங்கிலம் ஓகே வா , ஹிந்தி ஓகே வா என மாணவர்களை நோக்கி கேட்டார். அதற்கு தமிழுக்கு மட்டுமே மாணவ, மாணவிகள் சத்தம் போட்டு ஆரவாரம் செய்து ஓகே தெரிவித்தனர். ஹிந்திக்கு யாரும் ஆதரவு அளிக்காததால், ஹிந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி தான் என்று அஸ்வின் தெரிவித்தார்.

மேலும் நான் கேப்டனாக இல்லாததற்கும் பொறியியல் தான் காரணம் என்றும், யாராவது என்னை நீ சரிபட்டு வரமாட்ட என்று கூறினால் தான் அதை செய்வேன். கேப்டன் விஷயத்தில் யாரும் என்னை அப்படி கேட்கவில்லை என்று தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT