உலக கர்னிங் சாம்பியன்ஷிப் போட்டி. Dinamani
தற்போதைய செய்திகள்

அவலட்சண முகத் தோற்றத்தை வெளிப்படுத்தும் உலக சாம்பியன்ஷிப் போட்டி!

இங்கிலாந்தில் நடைபெறும் உலக கர்னிங் போட்டியைப் பற்றி...

DIN

இங்கிலாந்து நாட்டில் அவலட்சண முகத் தோற்றத்தை வெளிப்படுத்தும் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

வடமேற்கு இங்கிலாந்து நாட்டின் கும்பிரியா எனும் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவலட்சணமான முகத் தோற்றத்தை வெளிப்படுத்தும் அசாதாரண போட்டியான, உலக கர்னிங் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த வருடம் அங்கு நடைபெற்ற கிராப் கண்காட்சியில் நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் பங்குபெறும் போட்டியாளர்கள் அனைவரும் மேடையில் ஏறி தங்களது முகத்தை சுளித்து பல்வேறு வினோத பாவணைகள் செய்து அவலட்சணமான முகத் தோற்றத்தை உருவாக்கிக்காட்ட வேண்டும்.

இதையும் படிக்க: லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 10-ஆக உயா்வு

அதில் யாருடைய முகம் அருவருப்பாகவும் அவலட்சணமான தோற்றத்தை வெளிப்படுகிறதோ அவருக்கு நடுவர்கள் அளிக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இதில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் பிரிவாக போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்த போட்டிகளில், டாமி மேட்டின்சன் என்பவர் 18 முறை உலக கர்னிங் சாம்பியன்ஷிப் வென்று உலக சாதனைப் படைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் அவரது அப்பா 10 முறை உலக கர்னிங் சாம்பியனாக இருந்ததாகவும், அந்த பாரம்பரியத்தை கடைபிடித்து தானும் இந்த போட்டியில் பங்கேற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்: விஜய்

நெல்லையில் அமித் ஷா தலைமையில் 22ஆம் தேதி பாஜக மண்டல மாநாடு!

நவீன் பட்நாயக் உடல்நிலை முன்னேற்றம்; இன்று வீடு திரும்புகிறார்

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புயல் சின்னம்!

SCROLL FOR NEXT