கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

மோசமான வானிலை: ராஞ்சியில் ஏராளமான விமானங்கள் தாமதம்!

ஜார்க்கண்டில் நிலவும் மோசமான வானிலையால் விமானங்கள் இயக்குவதில் தாமதம்..

DIN

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் மூடுபனியால் ஒரு விமானம் திருப்பிவிடப்பட்டதுடன் ஏராளமான விமானங்கள் தாமதமாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ராஞ்சியிலுள்ள பிர்ஸா முண்டா விமான நிலையத்தில் மோசமான வானிலையால் அங்கிருந்து புறப்படும் மற்றும் தரையிறக்கப்படும் விமானங்களின் சேவை தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஒரு விமானம் இயக்கப்பட வானிலையின் தெரிவுநிலை (விசிபிலிட்டி) குறைந்தபட்சம் 1,200 மீட்டர்களாக இருக்கவேண்டும். ஆனால், இன்று (ஜன.14) காலை 9.30 மணி முதல் தெரிவுநிலை 1,000 மீட்டர்களுக்கும் கீழ் உள்ளதினால் விமான சேவை தற்காலிகமாக தடைபட்டுள்ளது.

இதையும் படிக்க: தில்லி முதல்வர் அதிஷி மீது வழக்குப் பதிவு!

இதுகுறித்து, அந்த விமான நிலையத்தின் இயக்குநர் ஆர்.ஆர்.மௌரியா கூறியததாவது, மோசமான வானிலையினால் அங்கு தரையிறக்கப்பட வேண்டிய விமானம் ஒன்று மற்றொரு விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும், ஏராளமான விமானங்கள் தாமதமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சராசரி நாளான இன்று அந்த விமான நிலையத்தில் காலை 9.30 மணி முதல் வெறும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT