குடும்பத் தகராறில் வெட்டிக்கொல்லப்பட்ட பெண் கவுன்சிலர் கோமதி- கணவர் ஸ்டீபன்ராஜ் 
தற்போதைய செய்திகள்

திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை

சென்னை அடுத்த திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலரை வெட்டிக்கொன்றுவிட்டு அவரது கணவர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை அடுத்த திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநின்றவூரை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி கோமதி 26 ஆவது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கோமதி அவரது நண்பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு சென்ற ஸ்டீபன்ராஜ், கோமதியை கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தை மீறிய உறவு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

In Thiruninnarvoor, near Chennai, a VCK councillor was hacked to death and her husband surrendered at the police station.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர்ந்து கொட்டிய மழை! தண்ணீரில் மிதந்து சென்ற கார்! | Rain | Chennai

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 10 லட்சம் டாலர் வழங்கிய சீனா!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு!

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராஜிநாமா!

அங்கம்மாள் டிரெய்லர்!

SCROLL FOR NEXT