கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

காஞ்சிபுரம் அருகே 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி சிறுவர்கள் இருவர் உள்பட மூன்று பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

DIN

காஞ்சிபுரம் அருகே 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி சிறுவர்கள் இருவர் உள்பட மூன்று பேரை காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தாலுக்கா களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி , பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 2 சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அருகில் இருந்த பூங்காவிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் அங்கு இருந்த இளைஞர் ஒருவர் சிறுமிக்கு குளிர்பானம் வழங்கி உள்ளார். இதன் காரணமாக சிறுமி மயங்கிய நிலையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்து உள்ளனர்.

மயக்கம் தெளிந்து வீடு திரும்பிய சிறுமி இது குறித்து, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி சிறுவர்கள் இருவர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ், வழக்குப் பதிவு செய்து பள்ளி சிறுவர்கள் இருவரையும் காஞ்சிபுரம் சிறுவர் சீர்திருத்த இல்லத்திலும், இளஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக போராட்டம்! என்ன நடக்கிறது?

முதல்முறையாக ஆஸ்கருக்கு தேர்வான பப்புவா நியூ கினிய திரைப்படம்! பா.இரஞ்சித் தயாரிப்பு!

இந்த மிரட்டலுக்கெல்லாம் ராகுல் காந்தி பயப்படுவாரா? - முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை! முழு விவரம்

நல்ல நாள்... ஆஷிகா ரங்கநாத்!

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

SCROLL FOR NEXT