சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் பாய்ந்து சென்ற காளைகள். 
தற்போதைய செய்திகள்

சிவகங்கை அருகே களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம்!

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் மாட்டு வண்டி பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் மாட்டு வண்டி பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாடுகளுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடுகளுக்கு 6 கி.மீ. தொலைவும் பந்தய எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பெரியமாடு, சிறியமாடு என இரு பிரிவுகளாக கொல்லங்குடி மற்றும் நரிக்கோட்டை வரை நடத்தப்பட்ட இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த மாடுகள் பங்கேற்றன. பெரியமாடு பிரிவில் 9 ஜோடி மாடுகளும், சிறியமாடு பிரிவில் 23 ஜோடிகள் என மொத்தம் 32 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் பாய்ந்து சென்ற காளைகள்.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் மாடுகள் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன. முதல் 4 இடங்களை பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் வெற்றிக் கோப்பையும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

இப்போட்டிகளை, நாட்டசன்கோட்டை, கொல்லங்குடி, கண்டனிப்பட்டி, கீரனூர், அழகாபுரி, ராணியூர், சாத்தனி, பனங்காடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான ரசிகர்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டுகளித்தனர் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: தலைவர்கள் வாழ்த்து!

கிஸ் டிரெய்லர்!

நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை!

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து!

தங்கத்தைப் போல் வரலாறு காணாத உச்சத்தை தொடும் வெள்ளி!

SCROLL FOR NEXT