வானிலை அறிவிப்பு X / IMD
தற்போதைய செய்திகள்

நீலகிரிக்கு ரெட் அலர்ட்! தென் மாவட்டங்களில் இன்று கனமழை!

மழை குறித்த வானிலை அறிவிப்பு பற்றி...

DIN

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று(சனிக்கிழமை) அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று (ஜூன் 14) நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழையும் கோவை, தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் மிக கனமழையும் தேனி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாளை(ஜூன் 15) நீலகிரிக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 16, 17 தேதிகளிலும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT