முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை(ஜூன் 19) காலை வினாடிக்கு 6,829 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 19 ஜூன் 2025, 8:17 am IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.13 அடியிலிருந்து 113.81 அடியாக சரிந்துள்ளது.
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை(ஜூன் 19) காலை வினாடிக்கு 6,829 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக புதன்கிழமை காலை வினாடிக்கு 6,040 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 6,829 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.13 அடியிலிருந்து 113.81 அடியாக சரிந்துள்ளது.

நீர் இருப்பு 83.94 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.