சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை DIN
தற்போதைய செய்திகள்

முருக பக்தர்கள் மாநாடு: வாகனங்களுக்கு பாஸ் தேவையில்லை!

முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பற்றி...

DIN

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு பாஸ் தேவை என்ற நிபந்தனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று ரத்து செய்துள்ளது.

இந்து முன்னணி சார்பில் மதுரையில் நாளை மறுநாள் (ஜூன் 22) முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த மாநாடு நடத்துவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. அதன்படி, முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் அந்தந்த மாவட்ட காவல்துறையிடமிருந்து பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இதனை எதிர்த்து இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு, முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் பாஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும் மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் காப்பீடு, ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று ஆகியவற்றை காவல்துறையினரிடம் வழங்கி அவர்கள் பதிவு செய்த பிறகு உள்ளே அனுமதிக்கலாம் எனவும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் காவல்துறை ஆணவங்களை பரிசோதித்துக்கொள்ளாலாம் என்றும் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

அவ தான் என்னவ... 🌹🌹😘 கௌரி கிஷன்

இந்தியா வருகிறார் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர்!

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

SCROLL FOR NEXT