கோப்புப்படம் ENS
தற்போதைய செய்திகள்

தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல: இபிஎஸ் பேட்டி

பாஜக கூட்டணிக்காக தவம் இருக்கிறார்கள் என்று அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

DIN

பாஜக கூட்டணிக்காக தவம் இருக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சில நாள்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தங்களுக்கு திமுகதான் பிரதான எதிரி என்று கூறியிருந்தார். அவ்வாறெனில் வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா என்று கேள்வி எழுந்தது.

நேற்று கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கு பதிலளிக்கும்போது,

'பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி, கூட்டணியில் பாஜக இருந்ததால்தான் தோற்றோம், பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டடோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள். அவ்வாறு தவம் இருக்க வேண்டிய சூழ்நிலையை பாஜக தொண்டர்கள் ஏற்படுத்தியுள்ளனர். அதற்கு நான் பெருமைப்படுகிறேன். நேரம் வரும்போது கூட்டணி குறித்து பேசப்படும்' என்றார்.

நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக அதிமுகவை அண்ணாமலை இவ்வாறு கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டத்துக்குப் பின்னர், இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி,

'தவறாகப் பேசாதீர்கள். அதிமுக என்று அண்ணாமலை குறிப்பிட்டுச் சொன்னாரா? தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம்.

6 மாதங்களுக்குப் பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டேன்' என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

SCROLL FOR NEXT