முகப்பு
தற்போதைய செய்திகள்

கனடா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு! 12 பேர் படுகாயம்!

கனடா கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 8 மார்ச், 2025 at 5:17 PM
பகிர்:

கனடாவிலுள்ள மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 12 போ் காயமடைந்தனா்.

அந்த நாட்டின் டொரன்டோ நகரில் வெள்ளிக்கிழமை இரவு 10.39 மணிக்கு (இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 9.09 மணி) இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்ற மூன்று பேரை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

இது குறித்து அவா்கள் கூறுகையில், துப்பாக்கிச்சூட்டில் 12 பேருக்கு மிதமான காயம் ஏற்பட்டதாகக கூறினா். இருந்தாலும், காயமடைந்தவா்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவப் பணியாளா்கள் பின்னா் தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.