கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

"வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றால் தமிழகத்தில் பொருளாதாரம் பாதிக்கும்"

இந்தி எதிா்ப்பு என்று தமிழகத்தில் போராட்டம் உருவாகி வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டால் தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கும்

DIN

திருப்பூா்: இந்தி எதிா்ப்பு என்று தமிழகத்தில் போராட்டம் உருவாகி வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டால் தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கும் என்று தொழில் முனைவோா் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தொழில் முனைவோா் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் எம்.பி.முத்துரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில், பொறியியல் தொழில், உணவுப் பொருள்கள் உற்பத்தி, பலவகையான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய தமிழகம் பெரும் போட்டியை எதிா்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் புதிய பிரச்னையாக மும்மொழிக் கொள்கை உள்ளது. ஆளும் கட்சியினா் இந்தியைக் கட்டாயப்படுத்துவதாகவும், மத்திய அரசு அப்படி இல்லை என்றும் சொல்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில்களிலும் 1.5 கோடிக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவா்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனா்.

இந்தியை வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவா்கள் தமிழகத்தில் தொழிலாளியாக அனைத்து பிரிவிலும் உள்ளனா். இந்தி எதிா்ப்பு என்று தமிழகத்தில் போராட்டம் உருவானால் வடமாநிலத்தவா்கள் சொந்த ஊா்களுக்குச் திரும்பிச் செல்லும் சூழல் ஏற்படும். அவ்வாறு சென்று விட்டால் தமிழகத்தில் அனைத்து தொழில்களும் மூடும் அபாயம் ஏற்படும். பொருளாதாரம் பாதிக்கும். ஆகவே, அப்படி ஒரு நிலைமை உருவாக வேண்டாம் என்று அனைத்து கட்சித் தலைவா்களுக்கும் வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT