பாம்பு கடித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பாம்பு பிடி வீரர் சந்தோஷ் 
தற்போதைய செய்திகள்

கோவையில் பாம்பு பிடி வீரர் உயிரிழப்பு

கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாம்பு பிடி வீரர் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

DIN

கோவையில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த பாம்பை பிடிக்க முயன்ற பாம்புபிடி வீரரை கடித்த பாம்பு கடித்ததில் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை தொண்டாமுத்தூர் குடியிருப்புப் பகுதியில் பாம்பு ஒன்று புகுந்து இருப்பதாக சந்தோஷ் என்ற பாம்புபிடி வீரருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அந்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த பாம்புபிடி வீரர் சந்தோஷ், குடியிருப்புப் பகுதியில் புகுந்த நாகப்பாம்பை பிடிக்க முயன்ற போது, அவரை பாம்பு கடித்தது. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை சந்தோஷ் உயிரிழந்தார். அவருக்கு இயற்கை வன உயிரின ஆர்வலர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பாம்புபிடி வீரர் இறப்பு கோவை பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக கோவை பகுதிகளில் ராஜ நாகம் உள்ளிட்ட பல விஷ பாம்புகளை குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பிடித்து வனப் பகுதியில் விடுவித்து வந்தவர் சந்தோஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT