கோப்புப்படம் ENS
தற்போதைய செய்திகள்

சென்னையில் ஒருநாள்கூட வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடவில்லை!

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா பேட்டி

DIN

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 3 மாதத்தில் இயல்பைவிட 97% அதிகமாக கோடை மழை பெய்துள்ளது. கோடை காலத்தில் சென்னையில் இயல்பைவிட 129% அளவுக்கு மழை கூடுதலாக பதிவாகியிருக்கிறது. கடந்த 3 மாதங்களில் சென்னையில் ஒருநாள்கூட 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தொடவில்லை. அதிகபட்சமாக மே 4, 5 தேதிகளில் 39.6 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 6 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும். சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும். கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை. கடந்த சில நாள்களில் நீலகிரி, கோவை, தென்காசி, நீலகிரி, குமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT