பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை குப்பிச்சிபுதூர் விவசாயி தோட்டத்தில் போக்கு காட்டி வந்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை குப்புச்சிபுதூர் மேட்டுப்பதி அருகே தனியார் தோட்டம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை சிசிடிவி மூலம் பார்த்து விவசாயி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சிறுத்தை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும், ஐந்து பேர் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிந்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து சிறுத்தை நடமாடும் பகுதிகளில் வனத்துறையினர் மூன்று கூண்டுகளை வைத்தனர்.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 25 முதல் கால்நடைகளை தாக்கிக் கொண்டிருந்த சிறுத்தை புதன்கிழமை(நவ.19) அம்மன் கோவில் தனியார் தோட்டத்தில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் மற்றும் கோவை வனக்கால்நடை மருத்துவ அலுவலர் சிறத்தையினை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு உலாந்தி வனச்சரக அடர் வனப்பகுதியில் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியதால் போத்தமடை, குப்புச்சி புதூர் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.