கோவில்பட்டி அருகே சனிக்கிழமை மரத்தில் கார் மோதியதில் மூதாட்டி பலியானர், ஒருவர் காயமடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள திருவேங்கடம் சத்திரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் ஞானதுரை. இவர் அங்குள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதுரையில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் தனது மனைவி குணச்செல்வியுடன் பங்கேற்று விட்டு காரில் ஊருக்கு திரும்பியுள்ளார். காரை ஆபிரகாம் ஓட்டி வந்துள்ளார். கார் இளையரசனேந்தல் பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, கார் கட்டுப்பாட்டினை இழந்து சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதியதில் குணச்செல்வி(63) சம்பவ இடத்திலேயே பலியானார். ஆபிரகாம் ஞானதுரை காயமடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் குணச்செல்வி உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காயமடைந்த ஆபிரகாம் ஞானதுரையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.