PTI
தற்போதைய செய்திகள்

சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு ஜகதீப் தன்கர் வாழ்த்து!

சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்து!

இணையதளச் செய்திப் பிரிவு

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகின் மிகப்பெரிய ஜனநாயகமும் மனிதநேயத்தின் ஆறில் ஒருபங்கு உறைவிடமாகத் திகழும் பாரதத்தின் குடியரசு துணைத் தலைவராக தேர்வானதற்கு இதயங்கனிந்த வாழ்த்துகள்!

நமது நாட்டின் பிரதிநிதிகள் வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே நீங்கள் இப்பதவிக்கு வளர்ச்சி அடைந்துள்ளமைக்கானச் சான்று.

பொது வாழ்வில் உங்கள் பரந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ள நீங்கள், இப்பதவிக்கு தேஎர்வாகியுள்ளதன் மூலம் அப்பதவி பெரும் புகழடையப் போகிறது.

இத்தருணத்தில் இப்பெரும் தேசத்துக்கான உங்களின் சேவைக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நாட்டின் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவியை வகித்து வந்த ஜகதீப் தன்கா், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த ஜூலை 21-ஆம் தேதி திடீரென ராஜிநாமா செய்தாா். உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் பதவி விலகினாா்.

அதைத் தொடா்ந்து, குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. அதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி தரப்பு வேட்பாளரான ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நிதிபதி பி. சுதர்ஷன் ரெட்டியைவிட அதிக வாக்குகள் பெற்று தமிழகத்தைச் சேர்ந்த சி. பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

Former Vice President Jagdeep Dhankhar greets his successor CP Radhakrishnan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT