வேளச்சேரி குல்மோகர் அவென்யூவில் வசித்து வரும் தொழிலதிபர் அமீத் பிஸ்னாய் வீட்டிற்கு 2 காரில் வந்த அமலாக்கத்துறை அலுவலர்கள் 
தற்போதைய செய்திகள்

வேளச்சேரியில் தொழிலதிபர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை வேளச்சேரியில் கட்டுமான பணிகளை செய்து வரும் தொழிலதிபர் வீடு, அலுவலகங்களில் புதன்கிழமை காலை முதல் அமலாக்கத் துறை அலுவலர்கள் சோதனை...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை வேளச்சேரியில் கட்டுமான பணிகளை செய்து வரும் தொழிலதிபர் வீடு, அலுவலகங்களில் புதன்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடையார் காந்திநகர், மேற்கு மாம்பலம் பகுதியில் அமலாக்கத்துறை சோதனை செய்ய சென்ற நிலையில் வீட்டில் யாரும் இல்லாததால் மீண்டும் அமலாக்கத்துறை அலுவலர்கள் அலுவலகத்திற்கு திரும்பினார்.

இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள குல்மோகர் அவென்யூவில் வசித்து வரும் தொழிலதிபர் அமீத் பிஸ்னாய் வீட்டில் புதன்கிழமை காலை இரண்டு கார்களில் வந்த 8 பேர் கொண்ட அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமீத் பிஸ்னாய் விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும், இவர் பல்வேறு பண பரிவர்த்தனை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலதிபர் அமித் பிஸ்னாய்க் சொந்தமான வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில் புதன்கிழமை மீண்டும் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமித் பிஸ்னாய்க் வீட்டில் நடைபெற்று வரும் சோதனைகள் இரண்டு அல்லது மூன்று நாள்கள் நடைபெறலாம் எனவும் அதில் அவர் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்தல் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று மேற்கு மாம்பலம் ராஜி தெருவில் உள்ள சுப்பிரமணி ராமச்சந்திரன் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய அவரது வீட்டிற்கு சென்றபோது வீட்டில் ஆளில்லாததால் அமலாக்கத்துறையினர் மீண்டும் அலுவலகம் திரும்பினார்.

Enforcement officers have been conducting raids at the homes and offices of a businessman who is carrying out construction work in Velachery, Chennai, since Wednesday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்த பாகிஸ்தானியர் வெளியேற்றம்!

துல்கர் சல்மான் - 41 அப்டேட்!

ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

நாட்டின் மிக நீண்ட கண்ணாடிப் பாலம்! எங்கு அமைகிறது?

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: 3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

SCROLL FOR NEXT