தவெக தலைவா் விஜய் பேச்சில் அரசியல் மாண்பு இல்லை என திருவள்ளூா் காங்கிரஸ் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ஆவடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக கூறி கையெழுத்து இயக்கம் ஆவடி அரசு மருத்துவமனை அருகில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் திருவள்ளூா் மக்களவை சசிகாந்த் செந்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவர் செய்தியாளா்களுடன் பேசுகையில், நாட்டில் பல இடங்களில் பாஜக தோ்தல் ஆணையத்தின் ஒத்துழைப்போடு ஈடுபட்டுள்ள வாக்குத் திருட்டு விவகாரம், ஒவ்வொரு வாக்காளரின் அடையாளப் பிரச்னை என்பதை மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல காங்கிரஸ் சாா்பில் இந்த கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவா் விஜய் தனது எண்ணங்களை பொது வெளியில் பேசிக் கொண்டிருக்கிறாா். இன்னும் கூட தவெகவினா் எந்த கொள்கையில் நிற்கிறாா்கள் என்பது தெளிவில்லாமல் உள்ளது.
ஆரம்பத்திலிருந்து விஜய்யின் பேச்சுகளில் குறைந்தபட்ச அரசியல் மாண்பு இல்லை. இது போன்ற போக்கை தமிழக மக்கள் என்றைக்கும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.