முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணை நீர்வரத்து புதன்கிழமை காலை 1,075 கன அடியாக அதிகரித்துள்ளது குறித்து...

Updated On : 22 ஏப்ரல் 2026, 8:41 am IST
மேட்டூர் அணை நீர்வரத்து 1,075 கன அடியாக அதிகரித்துள்ளது - கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணை நீர்வரத்து புதன்கிழமை காலை 1,075 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 495 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,075 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80.92 அடியிலிருந்து 80.86 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 42.81 டிஎம்சி ஆக உள்ளது .

Advertisement

Advertisement

summary

Water Inflow to Mettur Dam Increases...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.