மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணை நீர்வரத்து 2369 கன அடியாக அதிகரித்துள்ளது குறித்து...
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணை நீர்வரத்து 2,369 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக திங்கள்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,951 கன அடியிலிருந்து 2,369 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட அனையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது
Advertisement
Advertisement
அணையின் நீர்மட்டம் 79.16 அடியிலிருந்து 79.26 அடியாக உயர்ந்துள்ளது . நீர் இருப்பு 41.22 டிஎம்சியாக உள்ளது . மழை அளவு 40 மி.மீ
Due to rainfall in the Cauvery's catchment areas, the inflow into the Mettur Dam has increased to 2,369 cubic feet per second.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.