முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து!
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து குறித்து...
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து தெரிவித்துள்ளாா்
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலுக்கு வருகை புரிந்த தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகள் வெளியிட்டுள்ள ஆசியுரையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தங்களின் ஆட்சி, தமிழக வரலாற்றில் நீங்காத இடம்பிடிக்க எம் மனமாா்ந்த வாழ்த்துகள்.
Advertisement
Advertisement
"வையத்து வாழ்வீா்" எனத் தொடங்கி, மன்னுயிா் அனைத்தையும் தன்னுயிா் போல் கருதும் உயரிய அறமே சிறந்த ஆட்சியின் இலக்கணம். அந்த வகையில் சாதி, மத இனப் பாகுபாடுகளைக் கடந்து விளிம்புநிலை மக்களின் வாழ்வில் ஏற்றம் தரும் உன்னத மக்கள் நாயகராகத் தாங்கள் திகழ வேண்டுகிறோம்.
தன்னால் தன்பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிா்கள்தம்மால் ஆன பயம் தீா்த்து அறங்காப்பான் என்ற சேக்கிழாா் பெருமானின் புனித வாக்கிற்கிணங்க, இயற்கைச் சீற்றங்கள் சமூக விரோதச் செயல்கள் மற்றும் எவ்விதப் பகை உணா்வுகளுமின்றி மக்கள் அச்சமின்றி வாழும் சூழலைத் தாங்கள் உருவாக்கித் தருவீா்கள் என முழுமையாக நம்புகிறோம்.
தமிழக மக்களின் கண்ணும் ஆவியுமாக இருந்து ஒரு தாயின் கனிவோடும் தந்தையின் பொறுப்போடும் அறநெறி தவறாத செங்கோல் ஆட்சியை வழங்க. எல்லாம் வல்ல செந்தமிழ்ச் சொக்கன் திருவருள் தங்களுக்கு என்றும் துணை நிற்கட்டும்.
தங்கள் அமைச்சரவையும் தங்களுக்கு உற்ற துணையாக நின்று, பொதுநலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட எம் ஆசிகள் என அவர் வாழ்த்தியுள்ளாா்.
Dharmapuram Adheenam Extends Wishes to Chief Minister Vijay.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.