ரசிக்க... ருசிக்க...

உடல் இளைக்க வேண்டுமா? இதை முயற்சித்துப் பாருங்கள்!

கே.முத்துலெட்சுமி

ஓட்ஸ் டயட் இட்லி

தேவையான பொருள்கள்:
சம்பா கோதுமை ரவை - ஒரு கிண்ணம்
ஓட்ஸ் - அரை கிண்ணம்
உப்பு - தேவையான அளவு
புளித்த தயிர் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய இஞ்சி - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
முந்திரி - தேவையான அளவு

செய்முறை:

  • மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். ஓட்ஸ் மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்துக் கொள்ளவும். 
  • பொடித்த ஓட்ஸ் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு கப் கோதுமை ரவை, புளித்த தயிர் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு, சிறிது தண்ணீரும் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • கரைத்த மாவுடன் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். 
  • பிறகு இட்லி தட்டில் ஊற்றி முந்திரியை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
  • சுவையான  ஓட்ஸ் டயட் இட்லி தயார்.
  • இதை தேங்காய் மற்றும் கொத்தமல்லி சட்னியுடன் சூடாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

வெளியானது 'தலைமைச் செயலகம்' டிரைலர்!

SCROLL FOR NEXT