ரசிக்க... ருசிக்க...

மிதமான சூட்டில் ஒரு மூலிகை டீ பருகலாமா?

எஸ். சரோஜா

தேவையான பொருள்கள்:

காம்பு நீக்கிய ஆவாரம் பூ, செம்பருத்திப்பூ இதழ்கள்,
துளசி இலை - தலா ஒரு தேக்கரண்டி
பொடித்தப் பனைவெல்லம் (அ) நாட்டுச் சர்க்கரை - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
ரோஜாப்பூ இதழ்கள் - 2 தேக்கரண்டி
சுக்குத்தூள் - அரை தேக்கரண்டி
வெற்றிலை - ஒன்று

செய்முறை: ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ, வெற்றிலை, துளசி, ரோஜாப்பூ இதழ்களை அலசி நான்கு நாள்கள் நிழலில் உலர்த்தவும். அதனுடன் ஏலக்காய், சுக்குத்தூள் சேர்த்து அரைத்தெடுக்கவும். இதுவே மூலிகைப்பொடி. ஒரு டம்ளர் தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி மூலிகைப் பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டவும். அதனுடன் பொடித்த பனை வெல்லம் (அ) நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து மிதமான சூட்டில் பருகவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT