ரசிக்க... ருசிக்க...

மரவள்ளிக்கிழங்கு பணியாரம்

DIN

தேவையானவை: 

மரவள்ளிக் கிழங்கு துருவல் - 3 கிண்ணம்
தோசை மாவு - ஒரு கிண்ணம்
தேங்காய்த் துருவல் - ஒரு கிண்ணம்
காய்ந்த மிளகாய் - 8
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
எண் ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: தேங்காய்த் துருவலுடன் காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து நீர் விடாமல் நைஸாக அரைக்கவும். இதனுடன் மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். தோசை மாவை இதில் சேர்த்து நன்கு கலக்கவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி, எண்ணெய் தடவி, காய்ந்ததும் மாவை ஊற்றவும். அடுப்பை "சிம்'மில் வைத்து, பணியாரங்களைத் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

- கா.அஞ்சம்மாள், ராமநாதபுரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்பிக் நிறுவனத்தின் Q2 லாபம் ரூ.53.10 கோடி!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... ஆஷ்னா ஜவேரி!

பால் நிலா... ஹர்லின் தியோல்!

உலக அரங்கில் இந்திய சினிமா... ரன்வீர் சிங் பேச்சு!

தமிழ்நாட்டில் இதுவரை 6.07 கோடி படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT