முகப்பு
செய்திகள்

கலாம் நினைவைப் போற்றுவோம்: குருநானக் கல்லூரியின் இளைஞர் எழுச்சி தினக் கொண்டாட்டங்கள்!

வேளச்சேரி குருநானக் கல்லூரியில் அக்டோ 14 ம் தேதி  காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை ”நூல், நூலகம், சமூகம்” எனும் தலைப்பில் முதல்  தேசிய கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது.

Updated On : 12 அக்டோபர், 2016 at 2:51 PM
பகிர்:

முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம் இளைஞர் எழுச்சி தினமாகக் கொண்டாடப்படும் எனத் தமிழக அரசு முன்னரே அறிவித்திருக்கிறது. அதையொட்டி மறைந்த கலாம் அவர்களின் நினைவைப் போற்றி இந்த ஆண்டுக்கான இளைஞர் எழுச்சி தினம் கொண்டாடப் படவிருக்கிறது.

இளைஞர் எழுச்சி தினத்தை முன்னிட்டு  சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் அக்டோ 14 ம் தேதி  காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை ”நூல், நூலகம், சமூகம்” எனும் தலைப்பில் முதல்  தேசிய கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது. குருநானக் கல்லூரியின் நூலகத் துறையுடன் இணைந்து விகடன் பிரசுரம், கலாம் சிந்தனைப் பேரவை, நூலகம் பேசுகிறது இதழ் மற்றும் சாலிஸ் உள்ளிட்ட அமைப்புகள் இந்நிகழ்வை நடத்துகின்றனர். மொத்தம் ஏழு அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டு சிறப்புறத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த நிகழ்வில் இயக்குனர் லிங்குசாமி, பத்திரிகையாளர் மாலன் நாராயணன், பேச்சாளர் பர்வீன் சுல்தானா, கவிஞர் சல்மா போன்றோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.