முகப்பு
செய்திகள்

எலக்ட்ரிக்கல் வீட்டு உபயோகப் பொருட்களை பழுது பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்!

வீட்டு உபயோக பொருட்களை பழுது நீக்கும் பயிற்சி பெற்றவர்களின் தேவை அதிகமாக உள்ளதால்  அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய அதற்கான பயிற்சி பெற வேலையில்லா இளைஞர்கள் முன்வர வேண்டும்.

Updated On : 26 அக்டோபர், 2016 at 3:56 PM
பகிர்:

வீட்டு உபயோக மின்சாதன பொருட்களைப் பழுதுபார்க்கும் பயிற்சி பெற்றால் அது சம்பந்தமான தொழில்களைச் செய்து நல்ல வருமானம் ஈட்டலாம்.

சிறிய கிராமம் முதல் பெரிய நகரம் வரையில் அனைவருடைய வீடுகளிலும் வீட்டு உபயோகத்திற்காக பல்வேறு மின்சாதனப் பொருட்கள் உள்ளன.   மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், வாட்டர் ஹீட்டர், டிவி உள்பட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் தங்களுடைய வீட்டு உபயோகப் பொருட்களை பழுது பார்க்க அடுக்குமாடி குடியிருப்புக்கென நியமிக்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரர்களைப் பயன்படுத்துகின்றனர். அந்த ஒப்பந்ததாரர் தனக்குக் கீழே ஆட்களை நியமித்து அதனைச் சரி செய்து தருகிறார். சாதாரண ஏழை, நடுத்தர பிரிவை சேர்ந்த மக்கள் அதற்காக பழுதுபார்க்கும் கடைகளை நாடிச் செல்கின்றனர்.  அதனால் சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரையில் வீட்டு உபயோகப் பொருட்களைப் பழுதுபார்ப்பவர்களின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது.  

Advertisement

ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அவர்களுடைய எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.   அதனால் அவர்கள் பழுது நீக்குவதற்காக வரும் பொருட்களை வாங்கி வைத்துவிட்டு பல நாட்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்கின்றனர்.  அதனால் காலதாமதம் ஏற்படுகிறது.  அதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இருந்தபோதிலும் வேறு வழி இல்லாததால் அவர்களை நாடிச் செல்ல வேண்டியுள்ளது.

வீட்டு உபயோக பொருட்களை பழுது நீக்கும் பயிற்சி பெற்றவர்களின் தேவை அதிகமாக உள்ளதால்  அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய அதற்கான பயிற்சி பெற வேலையில்லா இளைஞர்கள் முன்வர வேண்டும்.  அதற்கான பயிற்சியை முடித்தால் கைநிறையச் சம்பாதிக்கலாம்.   கைபேசி எண், முகவரியுடன் கூடிய விசிட்டிங் கார்டை அச்சடித்து, "போன் செய்தால் போதும். சேவை செய்ய வீடு தேடி வருகிறோம்' என்ற அறிவிப்புடன் களமிறங்கினால் இத்துறையில் நல்ல வருமானம் பெற்று மிக உயர்ந்த நிலையை அடைய அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

நியாயமான கட்டணத்தில் தரமான சேவையை வழங்கினால் நல்ல பெயரையும் வாங்கலாம்.  அதனால் வேலையில்லா இளைஞர்கள் இப்பயிற்சிகளைப் பெற்று சுய தொழில் துவங்கி நல்ல வருமானம் ஈட்டி வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடையலாம்.  இப்பயிற்சியை ஏற்கெனவே அனுபவம் உள்ளவர்களிடமும், அதற்கான குறுகிய கால படிப்புகளை நடத்திவரும் கல்வி நிலையங்கள் வாயிலாகவும் பெற்று பயனடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.