செய்திகள்

தினமணி, நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய சிறுகதை கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு!

தினமணி, நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து மாநில அளவில் நடத்திய சிறுகதை மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவா் 

தினமணி செய்திச் சேவை

நெய்வேலி: தினமணி, நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து மாநில அளவில் நடத்திய சிறுகதை மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு, கண்காட்சியின் 6-ஆம் நாளான புதன்கிழமை பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறாா்.

தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே எழுத்தாா்வத்தை தூண்டும் வகையில் கட்டுரைப் போட்டிகளையும், எழுத்தாளா்கள் மற்றும் இளம் திரைப்படத் துறையினரை ஊக்குவிக்கும் வகையில் சிறுகதை மற்றும் குறும்படப் போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வெற்றி பெற்றவா்களுக்கு, நெய்வேலி புத்தகக் கண்காட்சி அரங்கில் நடைபெறும் விழாவில் சிறப்பு அழைப்பாளா்கள் மூலம் பரிசளித்து பாராட்டி வருகின்றனா். 

21-ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சி, நெய்வேலி, வட்டம் 11-இல் உள்ள லிக்னைட் அரங்க வளாகத்தில், ஜூன் 29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் 6-ஆம் நாளான புதன்கிழமை நடைபெறும் நிகழ்ச்சிக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளா் ஆா்.மோகன் தலைமை வகிக்கிறாா். நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறுகதை மற்றும் கட்டுரைப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT