செய்திகள்

போதைக்கு அடிமையான பெண்களுக்கு மறுவாழ்வளிக்கும் சோப்புத் தொழில்!

கார்த்திகா வாசுதேவன்

காபூலில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பெண்களுக்கு மறுவாழ்வளிக்கும் விதத்தில் மர்குபா சஃபி என்ற பெண்மணி, போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின்
அலுவலகத்தின் (UNODC) உதவியுடன் நறுமண சோப் தயாரிக்கும் சிறு தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கி இருக்கிறார். சஃபிக்குச் சொந்தமான புறநகர் தோட்டமொன்றில் இந்த தொழிற்சாலை தொடங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சஃபியின் இந்த முயற்சிக்கு உதவும் விதத்தில் UNODC தானே செலவை ஏற்றுக் கொண்டு சஃபியை இந்தியாவுக்கு அனுப்பி இங்கே பெண்களுக்கான சிறு தொழில் நிறுவனங்கள் எவ்விதம் செயல்படுகின்றன என்பதற்கான பயிற்சியைப் பெற்று வருமாறு அனுப்பி வைத்தது. ஆக.. போதைப் பெண்களுக்கு மறுவாழ்வளிக்கும் சோப் தொழிற்சாலையை ஆஃப்கன் அரசு உதவியுடன் தொடங்கி தற்போது நடத்தி வருகிறார் மர்குபா சஃபி.

போதைப் பழக்கத்திற்கு அடிமையான பெண்களை அவர்களது குடும்பத்தினரே ஏற்றுக் கொள்ளாத நிலையில் அத்தகைய பெண்கள், தங்களது வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள்? கைவிடப்பட்டவர்களாகவும், முற்றிலும் நிராகரிக்கப்பட்டவர்களாகவும் கருதப்படும் அந்தப் பெண்களை மறுவாழ்வு பெறச் செய்ய எந்த தேவதூதர்கள் வரப்போகிறார்கள்? அவர்களை வாழ வைக்க நல்லிதயம் படைத்தவர்கள் எவரேனும் வந்தால் தான் அவர்களும் இந்த உலகில் வாழ முடியும். அவர்களை குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அந்நியப்படுத்தும் போது.. அவர்களுக்கான பாதுகாப்பான வாழ்வை முன்னிலைப்படுத்த வேண்டியது யார்? மர்குபா சஃபி போல யாராவது புறப்பட்டு வந்தால் தான் உண்டு. 

இந்த விஷயத்தில் இந்தியர்களான நமக்கு ஒரு சின்ன ஆறுதல்.. இந்தியாவில் இயங்கி வரும் கைவிடப்பட்ட பெண்களுக்கான சிறு தொழில் வாய்ப்பு நிறுவனங்களை ஆதர்சமாகக் கொண்டும் அவர்களைப் பின்பற்றியும் ஆஃப்கனில் நறுமண சோப் தொழிற்சாலையை போதைக்கு அடிமையான பெண்களுக்கு மறுவாழ்வளிக்கும் நோக்கில் தாம் ஏற்று நடத்தி வருவதாகத் தெரிவித்திருப்பது.

இதை நிச்சயம் பாராட்டலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT