செய்திகள்

நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் கோபம், எரிச்சல் வருமா?

சரியான நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் சிலருக்கு கோபம், எரிச்சல் வருவதைப் பார்த்திருக்கலாம். அது உண்மைதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

DIN

சாப்பாடு, மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. 'சாப்பாடு அதானே எல்லாம்' என்று வாழ்பவர்கள் அதிகம்.

'என்னால் ஒருநேரம் கூட சாப்பிடாமல் இருக்க முடியாது', 'எனக்குப் பிடித்த பிரியாணியை தினமும் கொடுத்தாலும் ரசித்து சாப்பிடுவேன்' , 'வாசனை நுகர்ந்துவிட்டால் நான் அதை சாப்பிட்டே ஆக வேண்டும்' - இவ்வாறு சாப்பாடு பிரியர்கள் அன்று முதல் இன்று வரை இருக்கத்தான் செய்கிறார்கள். 

அப்படிப்பட்ட உணவை சரியான நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் சிலருக்கு கோபம், எரிச்சல் வருவதைப் பார்த்திருக்கலாம். அது உண்மைதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

கோபம், எரிச்சல் போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் பசியுடன் வலுவாக இணைக்கப்பட்டிருப்பது புதிய ஆய்வொன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகம் (ARU) மற்றும் ஆஸ்திரியாவில் உள்ள கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் சயின்சஸ் ஆகிய நிறுவனங்களின் கல்வியாளர்கள் தலைமையிலான குழு, தங்களது புதிய ஆய்வில், பசி என்பது, அதிக அளவு கோபம் மற்றும் எரிச்சலுடன் தொடர்புடையது என்பதைக் கண்டறிந்துள்ளது.

மத்திய ஐரோப்பாவிலிருந்து ஆய்வில் பங்கேற்ற 64 பேரின் பசி மற்றும் அதனால் ஏற்படும் உணர்ச்சிகள், 21 நாள்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. மேலும் வீடு, அலுவலகம், பொது இடம் என எந்தெந்த சூழ்நிலைகளில் என்ன மாதிரியான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை பல்வேறு செயலிகள் மூலமாக பதிவு செய்தனர். 

அப்போது, பசி ஏற்பட்டால் அது கோபம்(34%), எரிச்சல்(37%), மகிழ்ச்சி(38%) ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் மனிதனின் வாழ்நாளில் இது தினமும் பாதிப்பை ஏற்படுத்துவதும் உறுதியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT