செய்திகள்

இளமையாக இருக்க வேண்டுமா? 30 வயதுக்குப் பின் இதெல்லாம் சாப்பிடுங்கள்!

சருமம் பொலிவாக இருக்க வேண்டும், வயதான தோற்றம் தெரியக்கூடாது என அழகு நிலையங்களுக்கு செல்வதிலும் வைட்டமின்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 

DIN

இப்போதெல்லாம்  பெண்களும் சரி, ஆண்களும் சரி, அழகுக்காக அவ்வளவு மெனக்கெடுகிறார்கள். சருமம் பொலிவாக இருக்க வேண்டும், வயதான தோற்றம் தெரியக்கூடாது என அழகு நிலையங்களுக்குச் செல்வதிலும் வைட்டமின்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 

ஆனால் பொதுவாக இன்று உணவு பழக்கவழக்கம் மாறிவிட்டது. துரித, பொருந்தா உணவுகளை மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. 

ஆனால் உணவுகளில் சில பொருள்களை தொடர்ந்து சேர்த்துக்கொள்வதன் மூலம் சரும அழகைக் கூட்டலாம், வயது முதிர்வை ஓரளவு தடுக்கலாம். இளமையாக இருக்க, சருமம் ஆரோக்கியமாக பொலிவுடன் இருக்க கீழ்குறிப்பிட்ட உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம். 

இந்த பொருள்கள் எல்லாம் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கான வைட்டமின்களை அதிகம் கொண்டுள்ளன.

♦ ப்ளுபெரி, ஸ்ட்ராபெரி, ராஸ்பெரி போன்ற பெரி வகைகள்

♦ ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்த மீன்கள் 

♦ கீரைகள் உள்ளிட்ட பச்சை இலைக் காய்கறிகள் 

♦ நட்ஸ் வகைகள் மற்றும் பிளக்ஸ், சியா விதைகள். 

♦ கெட்டித் தயிர்

♦ மஞ்சள் 

♦ க்ரீன் டீ 

♦ தக்காளி 

♦ அவோகேடா 

♦ டார்க் சாக்லேட்

♦ புரோக்கோலி 

♦ பப்பாளி 

♦ மாதுளை விதைகள் 

பொதுவாக அனைத்து வகை காய்கறிகளையும் பழங்களையும், அசைவத்தில் மீன் வகைகளையும் எடுத்துக்கொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

SCROLL FOR NEXT