முகப்பு
ஸ்பெஷல்

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் 108 வீணை இசை வழிபாடு! 

வீணை காயத்ரி உள்ளிட்ட இசைப்பேராசிரியர்கள் மற்றும் இசைஆசிரியைகள் பலர் தங்களது வீணை இசை மாணவிகள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்று  கிட்டத்தட்ட 2 மணி நேரம் வீணையிசையால் அன்னை மீனாட்சியை வழிபட்டனர்.

Updated On : 12 அக்டோபர், 2016 at 11:24 AM
பகிர்:

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் 108 வீணை இசை வழிபாடு நடத்தப் பட்டது. வீணை காயத்ரி உள்ளிட்ட இசைப்பேராசிரியர்கள் மற்றும் இசைஆசிரியைகள் பலர் தங்களது வீணை இசை மாணவிகள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்று  கிட்டத்தட்ட 2 மணி நேரம் வீணையிசையால் அன்னை மீனாட்சியை வழிபட்டனர். விஜயதசமியை ஒட்டிய இந்தப் பெரும் இசை நிகழ்ச்சி கடந்த வருடமும் சிறப்புற நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

வீணையின் அரசியான கலைவாணிக்கு உகந்த விஜயதசமித் திருநாளில் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக தாங்கள் அன்னை மீனாட்சி ஆலயத்தில் 108 வீணை இசை வழிபாடு நடத்தியதாக இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இசை ஆசிரியைகள் பலர் தெரிவித்தனர். வீணை இசை அதைக் கேட்டு ரசிப்பவர்களின் மனக்கலக்கத்தைக் கூடப் போக்க வல்லது அதோடு நமது பாரம்பரிய இசைக் கருவியான வீணை கற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வரும் இவ்வேளையில் இப்படியான வழிபாடுகள் மன நிறைவைத் தருவதோடு வாழ்வில் புது நம்பிக்கைகள் முகிழ்க்கவும் உதவுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.