ஸ்பெஷல்

தினுசு, தினுசாய் இந்தியப் பட்டுப் புடவைகள்!

விமான ஏர் ஹோஸ்டஸ் விரும்பி அணியும் புடவை இது. இதில் எம்பிராய்டரி ஜியார்ஜெட், டிசைனர் ஜியார்ஜெட் மற்றும் பொது உபயோகத்திற்கென  மூன்று ரகங்கள் உண்டு.

ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்

பட்டுப் புடவைகளில் பல வகைகள்: பொதுவாக பட்டுப் புடவைகள்  காஞ்சிபுரம் பட்டு ( தமிழ்நாடு) பனாரஸ் சில்க் (வாரணாசி), உப்படா சாரீஸ் ( ஆந்திரா), பைதாலி சாரீஸ் ( மகாராஷ்டிரா), அஸ்ஸாம் சில்க், துகார் சில்க் (மேற்கு வங்காளம்) என முதன்மைப்படுத்தி கூறலாம்.
பனாரஸ் புடவை - தங்க இழை வேலைப்பாடு அதிகம். ஜரிகை மற்றும் எம்பிராய்டரியும் உண்டு.
சந்தேரி சில்க் - இது பட்டு மற்றும் காட்டன் இணைந்தது எடை குறைவானது. மத்திய பிரதேசத்தின் அசோக்நகர் ஜில்லாவில் உள்ள  ஒரு ஊர்தான் சந்தேரி. இதில் இரண்டு ரகம் ரொம்பவும் பிரபலம். 1. சந்தேரி சில்க் புடவை, 2.  சந்தேரி காட்டன் சில்க் புடவை.

டான்ட் புடவை - மேற்கு வங்காளத்தை சார்ந்தது. வண்ணத்தில் பளிச்சென இருக்கும். எடை குறைவானது. எளிதில் எடுத்துச் செல்லலாம். பல வடிவமைப்புகளில் சுலபமாக கிடைக்கிறது. இதற்கு "Ever Green Saree'என்ற செல்லப் பெயரும் உண்டு. காரணம் இதனை சாதாரண சமயத்திலும்; பார்ட்டி சமயத்திலும் மற்றும் பண்டிகைகளின் போதும் எப்போது வேண்டுமானாலும் கட்டலாம். வங்காள பெண்களைப் பொருத்தவரை இதுவே முதல் சாய்ஸ்.
சம்பல் புரி புடவைகள் - இந்தியாவின் மிக அழகான புடவைகளில் ஒன்று. ஒடிசாவின் பெருமைக்குரியது. கைத்தறி புடவைகள் ( டசர் சில்க் மற்றும் மென்மை காட்டன் இணைத்து உருவாக்குவர்). இதற்கு "IKat' என செல்லப் பெயருண்டு. இதனை உள்ளூர் மக்கள் "Shadhi' புடவை எனவும் அழைப்பர். 4 மீட்டர் முதல் 9 மீட்டர் நீளத்தில் கிடைக்கும். அடக்கமாய் போர்த்திக் கொண்டு செல்ல மிக அழகான புடவை.  முதன்முதலில் ஒடிசாவின் சம்பல்பூர் ஜில்லாவில் உருவாக்கப் பட்டதால் இந்தப் பெயராம்.
கோசா புடவைகள் - கோசா புடவையை அணிந்தால் ஒரு கம்பீரம் வரும். ராஜபரம்பரையை சார்ந்தவரோ என பார்ப்பவர் வியப்பர். சால் (Sal)  மற்றும் சாஜா (Saja) மரங்களின் இழைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் பலவகைகள், பல வடிவமைப்புகள் சகஜம்.
சுத்தமான பட்டு மற்றும் சிறந்த வேலைப்பாடு மிக்கது என்பதால் விலையும் அதற்கு ஏற்ப உயர்ந்து கொண்டே போகும்.
நாவ்வாரில் (Nauvarl) புடவைகள் - மகாராஷ்டிராவின் பாரம்பரிய புடவை. 9 கெஜம் கொண்ட புடவையை, மார்வாரி பெண்கள் சகஜமாய் அணிவதை காணலாம். இதனை உள்பாவாடை இல்லாமல் அணிய இயலும்.
ஃஷிப்பான் (shiffan)  புடவைகள் - பெண்களால் மிகவும்  விரும்பப்படும் சிறந்த புடவை. எளிதில் கிடைக்கும். நிறைய வண்ணம் மற்றும் பூ வேலைப்பாடுகள் இதில் சகஜம். சுலபமாக கையால் தோய்க்க இயலும், காட்டன்; சில்க் மற்றும் சிந்தடிக், ஃபைபர் இணைந்த இழைகளால் உருவாக்கப்படுகின்றன. இதனால் இளம் பெண்களின், முதல் தேர்வாக இது உள்ளது.
ஜியார்ஜெட் புடவை - இது பல வண்ணங்களிலும்; அணி,மணி பூட்டி அழகு செய்திருப்பதிலும் சிறந்த புடவையாகும். கையாளுவது  சுலபம். நாமே "வாஷ்' செய்யலாம். பல ஸ்டைல்களில் பல வித பிரிண்ட்களில் இது கிடைக்கும். விமான ஏர் ஹோஸ்டஸ் விரும்பி அணியும் புடவை இது. இதில் எம்பிராய்டரி ஜியார்ஜெட், டிசைனர் ஜியார்ஜெட் மற்றும் பொது உபயோகத்திற்கென  மூன்று ரகங்கள் உண்டு.
(Die) டை பாணி புடவை -  இவை ராஜஸ்தானில் மிகவும் பிரபலம். குஜராத்திலும் விரும்பி அணிவர். பல வண்ணங்களில் கிடைக்கும். விலைகளும் தேவைக்கு ஏற்ப இருக்கும்.   "பிங்க்சிட்டி' என்னும், ஜெய்பூரில் இந்த புடவை மிகவும் பிரபலம். இதில் பந்தேஜ் புடவைகள், லெகாரியா புடவைகள் மற்றும் கர்சோலா புடவைகள் மிகவும் பிரபலம்.
கன்ராட் சில்க் புடவை - இது கோயிலில் அம்மன் அணிவதற்காகவே நெய்யப்படுகிறது. பார்டர் அகலமாய் இருக்கும். கல்யாணம் சார்ந்த தீம்களில், மயில்கள், யானைகள், செழுமை வளம் மற்றும் கற்பனை சார்ந்த வடிவமைப்புகளில் காவி நிறம், மற்றும் சாம்பல் நிறங்களில் கிடைக்கும்.
தன்சாய் பட்டுபுடவை - பனராஸ் புடவை போன்றது. இதில் பார்டர் கிடையாது. "பல்லு' வித்தியாசமாக இருக்கும். பூ வேலைப்பாடுகள்.  மற்றும் வேறு பல வடிவமைப்புகளில்  இவை உருவாக்கப்படுகின்றன.
இக்காட் மற்றும் பட்டோலா புடவை - இதுவும் "Tie & die' முறை. குஜராத், ஆந்திர பிரதேசம், ஒரிசா ஆகியவற்றில் இந்த பட்டுப் புடவை பிரபலம்.
பைதாலி சில்க் புடவை - மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் அருகில் உள்ள ஒருகிராமம் பைதாலி. இவற்றில் கிளிகள் உள்ளிட்ட திறமையான வேலைப்பாடு, பரந்த வரிவான தயாரிப்பு நிச்சயம். புடவைகளின் பார்டர்கள் தங்க இழைகள், சரிகைகள் கொண்டவை. இவை சிறந்த கைவினைஞர்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், சிறந்த கைவண்ண பிரதிபலிப்பு இருக்கும். விலையும் அதனை பிரதிபலிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை மண்டலங்களில் நிகழாண்டுக்குள் 50 கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சா்

அமெரிக்க கல்வி நிறுவனத்துடன் எத்திராஜ் மகளிா் கல்லூரி புரிந்துணா்வு

திருமணம் செய்து கொள்வதாக பெண்ணிடம் பணம் மோசடி: நெல்லை பொறியாளா் கைது

திருமலை: அக். மாத உற்சவ பட்டியல் வெளியீடு

நரிக்குறவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கல்

SCROLL FOR NEXT