நோல் சகோதரர்கள் வளர்த்தெடுத்த ஃபோட்டோ ஷாப் வரலாறு - 2
இதுவரையிலும் தனித்தனி மென்பொருளாக விற்கப்பட்ட அடோபி தயாரிப்புகள் 2003ஆம் ஆண்டு முதல் தொகுப்புகளாகக் கொடுக்கப்படத் துவங்கின.
போட்டோஷாப் 7.0 இன்றளவும் புழக்கத்தில் உள்ள இந்தப் பதிப்பு 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. படங்களைப் புனரமைப்பதில் பயன்படுத்தப்படும் ஹீலிங் பிரஸ் கருவி அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு முந்தைய பதிப்பு வரையிலும் கொடுக்கப்பட்டுவந்த ஸ்பிரேயர் கருவி நீக்கப்பட்டுவிட்டது. எழுத்துக்களை வடிவமைப்பதும், போட்டோஷாப் ஃபைல் பிரவுஸரும் இந்தப் பதிப்பிலேயே அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.
இதுவரையிலும் தனித்தனி மென்பொருளாக விற்கப்பட்ட அடோபி தயாரிப்புகள் 2003ஆம் ஆண்டு முதல் தொகுப்புகளாகக் கொடுக்கப்படத் துவங்கின. எடுத்துக்காட்டாக அச்சுத்துறை, புத்தகப்பதிப்பு, இதழ்கள் வடிவமைப்பு போன்ற பகுதிகளுக்குப் பயன்படுத்துவதற்காக கிரியேட்டிவ் சூட் ஃபார் டிசைனிங் ஸ்டேண்டர்ட் என்ற தலைப்பில் இன்டிசைன் 3.0, இல்லஸ்ட்ரேட்டர் 11.0, போட்டோஷாப் 8.0 மற்றும் அக்ரோபாட் 6.0 ஆகிய, வெவ்வேறு பதிப்புகளாக இருந்த நான்கு மென்பொருட்கள் ஒரு தொகுப்பாகக் கொடுக்கப்பட்டன. இதனால் அந்தந்த தொகுப்புகளில் இருந்த வெவ்வேறு பதிப்புகளுக்கு அதே பெயர், கிரியேட்டிவ் சூட் என்பதன் சுருக்கமான சிஎஸ் என்பது கொடுக்கப்பட்டது. அத்துடன் அடுத்த பதிப்புகளுக்கு சிஎஸ் 2, சிஎஸ்3 என்றும் பெயர் கொடுக்கப்பட்டன.
போட்டோஷாப் சிஎஸ் எட்டாவது பதிப்பு சிஎஸ் என்ற புதிய தொகுப்பில் 2003ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தரப்பட்டது. முதல் முறையாக இந்தப் பதிப்பில் கேமரா ரா 2.0, மேம்படுத்தப்பட்ட ஸ்லைஸ் டூல், ஷேடோ ஹைலைட், மேட்ச் கலர் ஆகிய கட்டளைகள், லென்ஸ் ப்ளர் ஃபில்டர், ஸ்மார்ட் கைட்ஸ் ஆகிய புதிய செயல்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
போட்டோஷாப் சிஎஸ்2 ஏப்ரல் 2005 இல் வெளிவந்த இந்தப் பதிப்பு செயல்பட 320எம்பி ரேம் மற்றும் மென்பொருளை நிறுவுவதற்கு 750 எம்பி இடமும் தேவைப்பட்டது. ஸ்மார்ட் ஆப்ஜெக்ட், இமேஜ் வார்ப், ஸ்பாட் ஹீலிங் பிரஸ் கருவி, ரெட் ஐ டூல், லென்ஸ் கரெக்ஷன் ஃபில்டர், ஸ்மார்ட் ஷார்ப்பன், ஸ்மார்ட் கைட்ஸ் மற்றும் வானிஷிங் பாயின்ட் வசதி ஆகியன அறிமுகம் செய்யப்பட்டன.
போட்டோஷாப் சிஎஸ்3- இல் சிஎஸ்2 வரையிலும் கொடுக்கப்பட்டு வந்த இமேஜ் ரெடி என்ற அனிமேஷனுக்கான மென்பொருள் நீக்கப்பட்டு, அதனைக் காட்டிலும் மிக எளிமையாக செயல்படுத்தக்கூடிய வசதிகள் நிறைந்த அனிமேஷன் என்ற பேனல் இணைக்கப்பட்டது இந்தப் பதிப்பில்தான். அத்துடன், பிளாக் அண்ட் ஒயிட் கன்வர்ஷன் அட்ஜஸ்ட்மென்ட், ஆட்டோ அலைன்மென்ட், ஆட்டோ பிளெண்ட், ஸ்மார்ட் ஃபில்டர்ஸ் ஆகியன அறிமுகம் செய்யப்பட்டன. யூசர் இன்டர்ஃபேஸ், கர்வ்ஸ், வானிஷிங் பாயின்ட், சேனல் மிக்ஸர், பிரைட்னஸ் அண்ட் கான்ட்ராஸ்ட் ஆகியனவும், க்ளோனிங் மற்றும் ஹீலிங் கருவிகளின் செயல்பாடுகளும் மேம்படுத்தப்பட்டன. பிரிண்ட் டயலாக் பாக்ஸýம், முதல் முறையக செல்பேசிகளில் பயன்படுத்தப்படும் படங்களை உருவாக்கும் வசதி இந்தப் பதிப்பிலிருந்தே அறிமுகம் செய்யப்பட்டது.
போட்டோஷாப் சிஎஸ்4 முதல் முறையாக 1 ஜிபி ரேம் மற்றும் 2ஜிபி ஹார்ட் டிஸ்க் இடமும் தேவை என்று பரிந்துரைத்த பதிப்பாக ஏப்ரல் 2008}இல் இது வெளியிடப்பட்டது. மேலும் மல்டிமீடியா வசதிக்காக க்விக் டைம் 7.2 மென்பொருளும் தேவை என்று அறிவுறுத்தியதும், நேரடியாக இணையவழி சேவையளிப்பதற்காக அகலக்கற்றை இணைய இணைப்பு தேவை என்றதும் இந்தப் பதிப்பிலிருந்துதான். நியூ அட்ஜஸ்ட்மென்ட் விண்டோ, பிற பகுதிகளில் சேதம் ஏற்படுத்தாத டாட்ஜ், பர்ன் கருவிகள், கன்டென்ட் அவேர் க்ராப்பிங், பிக்ஸல் கிரிட், புதிய மாஸ்க் பேனல், கன்டன்ட் அவேர் ஸ்கேல், ஃப்ளூயிட் கேன்வாஸ் ரொட்டேஷன், ஸ்மூத்தர் பேனிங் மற்றும் ஜூமிங், கலர் பிளைண்ட், 3டி உருவங்கள் வரைதல் மற்றும் மாற்றியமைத்தல், 3டி அனிமேஷன், 2டி உருவத்தை 3டி நிலைக்கு மாற்றுதல் போன்ற பல புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அத்துடன் ஆட்டோ பிளண்ட் உள்ளிட்ட பல பகுதிகள் மேம்படுத்தப்பட்டன.
போட்டோஷாப் சிஎஸ்5 இல் புதியதாக கன்டென்ட் அவேர் ஃபில், இன்டலிஜென்ட் செலக்ஷன் டெக்னாலஜி, அட்வான்ஸ்ட் எச்டிஆர் பிராசஸிங், எக்ஸ்டென்ட்ட் பெயின்டிங் எஃபெக்ட்ஸ், லோல்கலைஸ்ட் வார்ப் டூல், ஆட்டோ லென்ஸ் கரெக்ஷன், ஒர்க் ஸ்பேஷ் மேனேஜ்மென்ட், அட்வான்ஸ்ட் 3டி ஆப்சன்ஸ் மற்றும் 30 ஜஸ்ட் டூ இட் வசதிகளும் கொடுக்கப்பட்டன. ரா பிராசஸிங் வசதி மேம்படுத்தப்பட்டு தரப்பட்டது.
போட்டோஷாப் சிஎஸ்6 ஏப்ரல் 2012 இல் பல வகைகளில் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பாக வெளியிடப்பட்டது. இந்தப் பதிப்பில் கேமரா ரா (Camera Raw) மேம்படுத்தப்பட்டது. புராப்பர்டி பேனல், ப்ளர் கேலரி, அடாப்டிவ் ஒயிடு ஆங்கிள், பெர்ஸ்பெக்டிவ் க்ராப் டூல், லைட்டிங் எஃபெக்ட்ஸ், பப்பட் வார்ப் போன்ற பல புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அத்துடன், க்ராப் டூல், கன்டென்ட் அவேர், லிக்விஃபை, வார்ப் ட்ரான்ஸ்ஃபர், கலர் ரேஞ்ஜ், லேயர் பேனல், டைபோகிராபி போன்ற பல கருவிகளும், கட்டளைகளும் மேம்படுத்தப்பட்டன. தற்போது போட்டோஷாப் சிசி என்ற பதிப்பாக கொடுக்கப்படுகிறது. சிசி என்பதன் பொருள், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் என்பதாகும்.
தற்போது இணையம் வழியாக மட்டும் நேரடியாக மென்பொருளை அடோபி நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளும் வசதியுடனும், தேவையான காலம் மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் நிலையிலும் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு பதிப்பிலும், காலத்தின் தேவைக்கு ஏற்ப புதிய கருவிகளும், கட்டளைகளும், செயல்பாடுகளும் கொடுக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருவதாலேயே போட்டோஷாப் மென்பொருள் இன்றளவும் ராஸ்டர் வகைப்பட உருவாக்கத்திலும் எடிட்டிங்கிலும் முதல் நிலையில் உள்ளது.