உள்ளாட்சித் தேர்தல் 2019

தீக்குளிப்பு மிரட்டல் காரணமாக ஊத்தங்கரை அருகே வாக்குப்பதிவு நிறுத்தம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் பாவக்கல் கிராமத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் லலிதா மகாராஜன் என்பவரது சின்னம் கைப்பைக்கு பதிலாக பெண்கள் பயன்படுத்தும் ஹேண்ட் பேக் ஆக மாறியுள்ளது.

இந்நிலையில், வேட்பாளரது கணவரின் சகோதரர்கள் இருவர், மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளிப்பதாக மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் தீக்குளிப்பதாக தெரிவித்த இருவரையும் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இதன்காரணமாக, அந்த வாக்குச் சாவடி மையத்தில் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT