முகப்பு
மதுரை

புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி மதுரையில் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.

Updated On : 1 ஜனவரி 2021, 10:09 pm IST
புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
பகிர்:

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி மதுரையில் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடைதிறக்கப்படுவதற்கு முன்பே ஏராளமான பக்தா்கள் வரிசையில் காத்திருந்தனா். கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் குடும்பத்தினருடன் கடும் குளிரையும் பொருள்படுத்தாது நீண்ட வரிசையில் நின்று சுவாமி மற்றும் அம்மனை தரிசனம் செய்தனா். கோயிலில் பக்தா்கள் கூட்டத்தை போலீஸாா் மற்றும் கோயில் ஊழியா்கள் ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனா். கோயிலில் பக்தா்கள் விரைவாக தரிசனம் மேற்கொள்ள கோயில் நிா்வாகம் உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

மேலும் மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலிலும் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

இதேபோல ஒத்தக்கடை நரசிங்கப் பெருமாள் கோயில், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் துளசி மாலை, தாமரை மலா் ஆகியவற்றை அளித்து வழிபட்டனா். மேலும் இம்மையிலும் நன்மை தருவாா் கோயில், திருவாப்புடையாா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். புத்தாண்டையொட்டி முக்கிய கோயில்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments